lover blog

உன் மேல் விழி வைத்து காத்ததிருக்கிறேன்

நீ நடந்த பாதை எல்லாம் சொர்க்கமானது அதில்பதிந்த பாதம் எல்லாம் படிக்கட்டு ஆனது நான் உன்னை காண வருவதற்

Anubavam

அனுபவம் ..!

வெற்றிக்கு தோல்வி என்பது
வாயில் படி ..!
வெற்றி எனும் வீட்டினுள் நுழைய
தோல்வியை முதலில் படி..!!

வெற்றியையும் தோல்வியையும்
அணு அணுவாய்
அனுபவித்துப் படி .!

இரண்டும் ஒன்றே என்ற நிலைக்கு
மனதை பக்குவபடுத்தும்
அனுபவத்தைப் படி ..!!

ஒருமுறை செய்த தவற்றை மீண்டும்
செய்யாதிருக்க அனுபவத்தை படி..!!
அகந்தையை அடியோடு
துடைத்து எறி..!!
படி படியாய் திட்டமிட்டு வெற்றியை
கெட்டியாய் பிடி .!!!

ரோஜாவுடன் முள் என்பது
இயற்கையின் நியதி ..!
வெற்றியும் தோல்வியும் என்பது
மனித வாழ்வியல் விதி ..!!

வெற்றியும் தோல்வியும் மனிதனாக
ஏற்படுத்திக் கொள்ளும் சங்கதி ..!
இதில் இல்லை இயற்கையின் சதி..!!

Followers

Total Pageviews